/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாசில்தார் திட்டிய விவகாரம்: வி.ஏ.ஓ.,க்களிடம் விசாரணை
/
தாசில்தார் திட்டிய விவகாரம்: வி.ஏ.ஓ.,க்களிடம் விசாரணை
தாசில்தார் திட்டிய விவகாரம்: வி.ஏ.ஓ.,க்களிடம் விசாரணை
தாசில்தார் திட்டிய விவகாரம்: வி.ஏ.ஓ.,க்களிடம் விசாரணை
ADDED : மார் 28, 2025 01:35 AM
தாசில்தார் திட்டிய விவகாரம்: வி.ஏ.ஓ.,க்களிடம் விசாரணை
ஓமலுார்:தாரமங்கலம் அருகே பனிக்கனுார் வி.ஏ.ஓ., சரவணன். இவர் அனுமதியின்றி கனிமத்தை கொண்டு சென்ற வாகனத்தை கைப்பற்றியது தொடர்பாக, ஓமலுார் தாசில்தார் ரவிக்குமாரிடம் தகவல் தெரிவித்தார். அப்போது அவர், ஒருமையில் திட்டியதாக, ஓமலுார் வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகளிடம், சரவணன் புகார் தெரிவித்தார்.
இதனால் நேற்று முன்தினம் மாலை, ஓமலுார் தாசில்தார் ரவிக்குமாரிடம் விளக்கம் கேட்டு மனு அளித்தனர். தொடர்ந்து இரவு, 11:00 மணிவரை, தாசில்தாரை சிறைபிடித்து, அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, சேலம் டி.ஆர்.ஓ., ரவிக்குமார், சங்க நிர்வாகிகள், சரவணனை வரவழைத்து விசாரணை நடத்தினர். அதில் தாசில்தாரிடம் விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஆர்.ஓ., தெரிவித்ததாக, ஓமலுார் வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.