/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
/
பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஏப் 02, 2025 01:51 AM
பூங்கரகம், தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
சங்ககிரி:சங்ககிரி, சந்தைப்பேட்டை செல்லாண்டியம்மன், புத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த மார்ச், 18ல் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்து வருகிறது.
நேற்று காலை, வி.என்.பாளையம் தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள ஊர் கிணற்றில் இருந்து, வேண்டுதலை நிறைவேற்ற திரளான பக்தர்கள் புனிதநீர் எடுத்தனர்.
மேலும் பூங்கரகம் எடுத்தும், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும், அலகு குத்தியும் ஏராளமானோர், பழைய பஸ் ஸ்டேண்ட், மலையடிவாரம், தேர்வீதி வழியே ஊர்வலமாக வந்தனர். பின் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதில் தண்ணீர் தண்ணீர் அமைப்பு உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டது.
திருவீதி உலாதாரமங்கலம், குருக்குப்பட்டி கருமாரியம்மன் திருவிழாவை ஒட்டி, உற்சவர் அம்மனுக்கு உமாமகேஸ்வரி அலங்காரம் செய்து, மூலவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து உற்சவரை சிம்ம வாகனத்தில் எழுந்தருளச்செய்து முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலாவாக கொண்டு சென்று, கோவிலில் நிறைவு செய்தனர்.
பால்குட ஊர்வலம்வேம்படிதாளம் காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று காலை, திரளான பக்தர்கள், பால் குடம் எடுத்து, முக்கிய வீதிகள் ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு மேல் சக்தி கரகம் அழைத்தல், பூக்குண்டம் இறங்குதல் நடக்கிறது. நாளை சக்தி அழைத்து, மாவிளக்கு பூஜை, இரவு, கம்பம் பிடுங்குதல், 4ல் வடக்கயிறு கட்டி எருது கொண்டு வருதல், மாலை, வேடிக்கை நடக்கும்.

