/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாலிபர் மண்டை உடைப்புமக்கள் சாலை மறியல்
/
வாலிபர் மண்டை உடைப்புமக்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 03, 2025 01:52 AM
வாலிபர் மண்டை உடைப்புமக்கள் சாலை மறியல்
தலைவாசல்:தலைவாசல், வேப்பம்பூண்டி நடுமேட்டில் உள்ள, 'டாஸ்மாக்' கடை எதிரே, நேற்று இரவு, 9:00 மணிக்கு இரு பைக்குகள் மோதியதில், அதில் வந்தவர்கள் தடுமாறி விழுந்தனர். அங்கிருந்த, வேப்பம்பூண்டியைச் சேர்ந்த, டிரைவர் ஸ்டாலின், 27, விழுந்தவரை மீட்டு தண்ணீர் கொடுத்தார்.
அப்போது இலுப்பநத்தத்தை சேர்ந்த சிலர், ஸ்டாலினிடம் தகராறு செய்தனர். அதில், ஸ்டாலினை, 'பீர்' பாட்டிலால் மண்டையை உடைத்துள்ளனர். அதேபோல் இலுப்பநத்தத்தை சேர்ந்த, ஆனஸ்ட்குமார், 28, என்பவர் கற்களால் தாக்கியதில் காயமடைந்தார். இவர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வேப்பம்பூண்டியைச் சேர்ந்த நபர்களை கைது செய்யக்கோரி, இலுப்பநத்தம் மக்கள், இரவு, 10:00 மணிக்கு, வேப்பம்பூண்டி, நடுமேட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீரகனுார் போலீசார், பேச்சு நடத்திய பின் கலைந்து சென்றனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.