தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'கருவில் பாலினம் கண்டறிந்தால்மருத்துவமனை உரிமம் ரத்தாகும்'

'கருவில் பாலினம் கண்டறிந்தால்மருத்துவமனை உரிமம் ரத்தாகும்'

'கருவில் பாலினம் கண்டறிந்தால்மருத்துவமனை உரிமம் ரத்தாகும்'


ADDED : ஏப் 05, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'கருவில் பாலினம் கண்டறிந்தால்மருத்துவமனை உரிமம் ரத்தாகும்'

சேலம்:சேலம் மாவட்டத்தில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், தனியார் மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் கர்ப்பிணியரின் பிரசவம், 100 சதவீதம் சுகப்பிரசவம் செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது: மருத்துவமனைகளில், 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்' பரிசோதனை மூலமோ, வேறு பரிசோதனை மூலமோ, கருவில் இருக்கும் குழந்தை பாலினம் கண்டறிந்து தெரிவிக்கப்படுவது சட்டப்படி குற்றம். அப்படி தெரிவித்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது ஸ்கேன் மைய உரிமம் ரத்து செய்யப்படும். அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் சுகப்பிரசவம் நடக்கும்படி, மருத்துவ துறையினரால் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.இணை இயக்குனர் நந்தினி, துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், யோகானந்த், சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், மாநகர நல அலுவலர் முரளி உள்ளிட்ட அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us