/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எலுமிச்சை முட்டை கரைசல்அனைத்து பயிருக்கும் தெளிக்கலாம்
/
எலுமிச்சை முட்டை கரைசல்அனைத்து பயிருக்கும் தெளிக்கலாம்
எலுமிச்சை முட்டை கரைசல்அனைத்து பயிருக்கும் தெளிக்கலாம்
எலுமிச்சை முட்டை கரைசல்அனைத்து பயிருக்கும் தெளிக்கலாம்
ADDED : ஏப் 06, 2025 01:45 AM
எலுமிச்சை முட்டை கரைசல்அனைத்து பயிருக்கும் தெளிக்கலாம்
வீரபாண்டி:வீரபாண்டி வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை: அலுமினியம், இரும்பு, பித்தளை போன்ற பாத்திரங்கள் இல்லாமல் மூடி உள்ள பிளாஸ்டிக் வாளி அல்லது பிளாஸ்டிக் டிரம் எடுத்துக்கொள்ளவும். பிளாஸ்டிக் பாத்திரத்தில், 10 முட்டைகளை முழு ஓட்டுடன் வைத்து எலுமிச்சை பழங்களை அறுத்து முட்டைகள் மூழ்கும்படி சாறு பிழிய வேண்டும்.
அத்துடன், 250 கிராம் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். வெல்ல கரைசல் செய்யும்போது, வெல்லம் கரையும் அளவுக்கு நீர் கொடுத்தால் போதும். பின் காற்று புகாமல் இறுக்கி மூடி, 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். 10-ம் நாள் மூடியை திறந்து பார்த்தால் முட்டை ஓடுகள் கரைந்திருக்கும். அழுத்தி பார்த்தால் ரப்பர் பந்தை அழுத்துவது போன்று இருக்கும்.
இதை கையால் பிசைந்தோ, மிக்சியில் அரைத்தோ கூழ்போல் செய்ய வேண்டும். இந்த கரைசல் எவ்வளவு அளவில் இருக்கிறதோ அதே அளவு வெல்லக்கரைசல் அல்லது மொலாசஸ் கரைசல் ஊற்ற வேண்டும். பின், காற்று புகாமல் மூட வேண்டும். 20-ம் நாளில் கரைசல் தயாராகி விடும். பாட்டில்களில் அடைக்கும்போது வாயு வெளியேறுவதால் மூடி வைக்கக்கூடாது. கைத்தெளிப்பான் அல்லது விசைத்
தெளிப்பான் மூலம், 1.5 சதவீத கரைசல்(10 லிட்டர் நீருக்கு, 150 மில்லி லிட்டர்) என்ற விகிதத்தில் கலந்து அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.