மாலையை கழற்றி மது அருந்திகழுத்தறுத்துக்கொண்ட 'குடி'மகன்
மாலையை கழற்றி மது அருந்திகழுத்தறுத்துக்கொண்ட 'குடி'மகன்
ADDED : ஏப் 10, 2025 01:56 AM
அ நிறம் | அளவு
மாலையை கழற்றி மது அருந்திகழுத்தறுத்துக்கொண்ட 'குடி'மகன்
ஏற்காடு:ஏற்காடு, லாங்கில்பேட்டையை சேர்ந்த பெயின்டர் அருண், 35. இவர் குருசுமலை தோமையார் கோவிலுக்கு மாலை போட்டிருந்த நிலையில், பாதியில் கழற்றிவிட்டு நேற்று மது அருந்தினார். இதை அவரது தாய் தட்டிக்கேட்டார்.
இந்நிலையில் மாலை, 5:00 மணிக்கு, போதையில் இருந்த அருண், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். குடும்பத்தினர் மீட்டு, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.