/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் கண்டக்டரை தாக்கியகல்லுாரி மாணவர் கைது
/
பஸ் கண்டக்டரை தாக்கியகல்லுாரி மாணவர் கைது
ADDED : ஏப் 10, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் கண்டக்டரை தாக்கியகல்லுாரி மாணவர் கைது
பெத்தநாயக்கன்பாளையம்:சேலத்தில் இருந்து வெள்ளிமலை நோக்கி, நேற்று முன்தினம், அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. வாழப்பாடியில், 3 பேர் ஏறி செக்கடிப்பட்டிக்கு, படியில் நின்றபடி பயணித்தனர். அவர்களை, பஸ் கண்டக்டரான, தாண்டனுாரை சேர்ந்த செந்தில்குமார், 51, உள்ளே வரும்படி தெரிவித்தார்.
இதில் வாக்குவாதம் ஏற்பட்டது. செக்கடிப்பட்டிக்கு பஸ் சென்றதும், 3 பேரும் செந்தில்குமாரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து அவர் புகார்படி, ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, அரசு கல்லுாரி மாணவர் விஜய், 20, ரீகன், 21, பெயின்டர் விக்ரம், 23, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.