/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா கல்வி நிறுவனத்தில்விளையாட்டு விழா கொண்டாட்டம்
/
சோனா கல்வி நிறுவனத்தில்விளையாட்டு விழா கொண்டாட்டம்
சோனா கல்வி நிறுவனத்தில்விளையாட்டு விழா கொண்டாட்டம்
சோனா கல்வி நிறுவனத்தில்விளையாட்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஏப் 16, 2025 01:25 AM
சோனா கல்வி நிறுவனத்தில்விளையாட்டு விழா கொண்டாட்டம்
சேலம்:சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக், சோனா தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு விளையாட்டு விழா, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. சோனா கல்வி குழும துணைத்தலைவர் தியாகு தலைமை வகித்தார்.
முன்னதாக, விளையாட்டு துறை இயக்குனர்கள் சவுந்தராஜன், ஸ்ரீதரன், அனிதா ஆகியோர், விளையாட்டு அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்திய கபடி அணி முன்னாள் உறுப்பினர் கணேசன், போலீஸ் எஸ்.ஐ., துர்காதேவி பேசினர். தொடர்ந்து சோனா கல்வி நிறுவனங்கள் சார்பில் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு, தியாகு, கணேசன், துர்காதேவி ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மண்டல, மாநில, அகில இந்திய பல்கலை அளவில் பளுதுாக்குதல், சதுரங்கம், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் உள்ளிட்டவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும் கல்லுாரி பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சோனா கல்வி குழும இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர்கள் செந்தில்குமார், காதர்நவாஷ், கனகராஜ் மற்றும் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

