/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பதிவுப்பணியில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கை'

ADDED : செப் 19, 2025 01:21 AM
சேலம் சேலம் மண்டல அளவில் பதிவுத்துறை அலுவலர்களின் பணி சீராய்வு கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
பதிவுத்துறை சேவை கள், மக்களுக்கு எளிதாக கிடைக்க, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் நடக்கும் பதிவுப்பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில், கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மனைப்பிரிவுகள் மதிப்பு நிர்ணயம் செய்தல் குறித்தும், சரியான வழிமுறைகளை பின்பற்றி, அரசுக்கான வருவாய் ஈட்டப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ், சேலம் கிழக்கு, மேற்கு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய, பதிவு மாவட்ட சார் பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் பங்கேற்றனர்.