/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'விபத்தில்லா தீபாவளி' கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
'விபத்தில்லா தீபாவளி' கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
'விபத்தில்லா தீபாவளி' கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
'விபத்தில்லா தீபாவளி' கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 08, 2025 02:06 AM
ஆத்துார், நரசிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆத்துார் தீயணைப்பு துறை சார்பில், 'விபத்தில்லா தீபாவளி' கொண்டாடுவது மற்றும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பட்டாசு வெடிக்கும் வழிமுறை, பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருத்தல், பட்டாசு வகைகள், தீ விபத்தில் மீட்பு பணி, வடகிழக்கு பருவ மழையில் முன்னெச்சரிக்கை குறித்து, தீயணைப்பு அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.
அதேபோல் மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், கொளத்துாரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவியருக்கு, தீபாவளி பண்டிகைக்கு விபத்து ஏற்படாமல் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து கொளத்துார் ஊராட்சி ஒன்றிய அரங்கத்தில், அங்கன்வாடி அமைப்பாளர்கள், சமையலர்கள், 80 பேருக்கு காஸ் உபயோகித்து உணவு சமைக்கும்போது ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரம் வழங்கினர்.