/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கான்கிரீட் கால்வாய் சாலை பணி துவக்கம்
/
கான்கிரீட் கால்வாய் சாலை பணி துவக்கம்
ADDED : நவ 20, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, நவ. 20
நிலவாரப்பட்டி ஊராட்சி இருசாயி அம்மன் கோவில் தெருவில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்க, பொது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பனமரத்துப்பட்டி பி.டி.ஓ., கார்த்தி தலைமை வகித்து, நேற்று முன்தினம் அப்பணியை தொடங்கி வைத்தார்.
அதேபோல் அமானிகொண்டலாம்பட்டி ஊராட்சி சின்னகொண்டலாம்பட்டியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

