ADDED : ஏப் 02, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
சேலம், ஏசேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளிலும் புது வாக்காளர்களுக்கு அச்சிடப்பட்டு, முதல் கட்டமாக வரப்பெற்ற, 36,424 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, அஞ்சல்துறை மூலம் கடந்த, 9 முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. 2ம் கட்டமாக அச்சிடப்பட்டு, தற்போது வரப்பெற்ற, 1,06,715 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள், அஞ்சல்துறை
மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடு தேடி சென்று வினியோகிக்கும் பணி நடக்கிறது.மூன்றாம் கட்டமாக, 12,947 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிடும் பணி நடக்கிறது என, மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்தார்.
