/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கடைகளில் தமிழில் பெயர் பலகைமே 15 வரை அவகாசம் வழங்கல்
/
கடைகளில் தமிழில் பெயர் பலகைமே 15 வரை அவகாசம் வழங்கல்
கடைகளில் தமிழில் பெயர் பலகைமே 15 வரை அவகாசம் வழங்கல்
கடைகளில் தமிழில் பெயர் பலகைமே 15 வரை அவகாசம் வழங்கல்
ADDED : ஏப் 04, 2025 01:36 AM
கடைகளில் தமிழில் பெயர் பலகைமே 15 வரை அவகாசம் வழங்கல்
சேலம்:சேலம் மாவட்ட அளவில் அனைத்து கடைகள், உணவகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரி பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துகள் பெரிய அளவில் முதன்மையாக இருக்க வேண்டும். அதன்கீழ் ஆங்கிலம், அவரவர் விரும்பும் மொழிகள் இடம்பெற வேண்டும் என தொழிலாளர் நலச்சட்டம் உள்ளது. இதை உறுதிப்படுத்த, சேலம் மாவட்ட குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:இதற்குரிய சிறப்பு குழுவில் உள்ள அதிகாரிகள், அவரவர் பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில், அரசு உத்தரவுப்படி 100 சதவீதம், தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். மே, 15க்குள் அனைத்து கடைகள், உணவகம், பள்ளி, கல்லுாரிகளில் தமிழில் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், டி.ஆர்.ஓ., ரவிக்குமார், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அசோக்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் திருநந்தன் பங்கேற்றனர்.