/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உலக வன நாள் போட்டி18க்குள் விண்ணப்பிக்கலாம்
/
உலக வன நாள் போட்டி18க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 15, 2025 02:24 AM
உலக வன நாள் போட்டி18க்குள் விண்ணப்பிக்கலாம்
சேலம்:சேலம் நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லுாரியில் வரும், 21ல், உலக வன நாள் போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்க, வரும், 18க்குள் பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்டோர் விபரம், மறுநாள் அறிவிக்கப்படும். சேலம், நாமக்கல், ஆத்துார், தர்மபுரி, கோவையில் உள்ள கலை, அறிவியல் கல்லுாரி, பாலிடெக்னிக், மருத்துவம், பொறியியல் நிறுவனங்களை சேர்ந்த இளங்கலை, முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கலாம்.
வேட்டை தடுப்பு தொழில்நுட்பம், மனித - விலங்கு மோதல், வனவிலங்கு கண்காணிப்பில் ஏ.ஐ., தொழில்நுட்பம், ட்ரோன்கள், வனவிலங்கு பாதுகாப்புக்கான நவீன தொழில்நுட்பம், காலநிலை தகவல் போன்ற முக்கிய கருப்பொருளை உணர்த்தும்படி போட்டி நடக்கும். விபரங்களை, https.://tinyurl.com/hackwild25 என்ற இணையத்தில் பார்க்கலாம் என, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி தெரிவித்துள்ளார்.