தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விநாயகா மிஷன்ஸ் பல்கலையில்இன்று 'வின்ஸ்போர்ட்ஸ் 2025' நிறைவு

விநாயகா மிஷன்ஸ் பல்கலையில்இன்று 'வின்ஸ்போர்ட்ஸ் 2025' நிறைவு

விநாயகா மிஷன்ஸ் பல்கலையில்இன்று 'வின்ஸ்போர்ட்ஸ் 2025' நிறைவு


ADDED : மார் 21, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விநாயகா மிஷன்ஸ் பல்கலையில்இன்று 'வின்ஸ்போர்ட்ஸ் 2025' நிறைவு

சேலம்:சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலையின், ஆண்டு விளையாட்டு போட்டி, 'வின்ஸ்போர்ட்ஸ் - 2025' பெயரில் நேற்று தொடங்கியது.

அதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சரவணன், ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி, போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பல்கலை துணைவேந்தர் கதிர் தலைமை விருந்தினராக பங்கேற்றார். இன்று நிறைவு விழா நடக்கிறது.

அதில் அர்ஜூனா, கேல் ரத்னா, பத்மஸ்ரீ விருதுகளை வென்ற, பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன், தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அவர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், சான்றிதழ்களை வழங்குகிறார். இதில் பல்கலை பதிவாளர் நாகப்பன், கவுரவ விருந்தினராக பங்கேற்கிறார்.

பல்கலை மாணவர் நல இயக்குனர் சண்முக சுந்தரம், விநாயகா மிஷன்ஸ் உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் சரவணன், இயக்குனர் பினோத், மாணவ, மாணவியர், ஏற்பாடுகளை செய்கின்றனர். பல்கலை இயக்குனர்கள், அனைத்து உறுப்பு கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us