/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பசுமை பள்ளி திட்டம்: 3 அரசு பள்ளி தேர்வு
/
பசுமை பள்ளி திட்டம்: 3 அரசு பள்ளி தேர்வு
ADDED : ஜன 19, 2025 01:37 AM
ஆத்துார், : காலநிலை மாற்றத்தால் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ள, சூழல் மேம்பாட்டு நடவடிக்கைக்கு, பசுமை பள்ளிகள் திட்டத்தில், 100 பள்ளி களுக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் ஆத்துார் அருகே கீரிப்பட்டி மற்றும் பனைமடல் அரசு மேல்நிலைப்பள்ளிகள், மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, தலா, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'இந்த நிதியில், தேர்வு செய்துள்ள பள்ளிகளில் சூரிய சக்தி மின்சார உற்பத்தி, சொட்டு நீர் பாசனம், மரக்கன்று நடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.

