/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
/
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 23, 2025 01:23 AM
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'
சேலம்,:வாழப்பாடியில் புறப்பட்ட தனியார் பஸ், சேலம், சின்னக்கடை வழியே, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த டிரைவர் கோகுல்நாத், 35, ஓட்டினார். கண்டக்டர் பூபாலன் பணியில் இருந்தார். முன்புறம் சென்ற பைக், பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதால், டிரைவர், ஹாரன் அடிக்க, 'ஓரமாக போக மாட்டீர்களா' என, கண்டக்டர் கேட்டார்.
இந்நிலையில் அந்த பஸ் பழையபஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தது. அங்கு பைக்கில் வந்த, 5 பேர், டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கிவிட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த டிரைவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்டக்டர் புகார்படி, சேலம் டவுன் போலீசார், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 34, நந்தகோபால், 29, அருண்குமார், 28, ஆகியோரை கைது செய்து, தலைமறைவான இருவரை தேடுகின்றனர்.

