ADDED : பிப் 01, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி
ஓமலுார்: காடையாம்பட்டி, பூசாரிப்பட்டி அருகே அல்லிமுத்துகொட்டாயை சேர்ந்த, விவசாயி தங்கமணி, 25. இவர் வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, ஆடுகளை பட்டியில் அடைத்தார். நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள் குடல் தள்ளிய நிலையில் இறந்து கிடந்தன. 13 ஆடுகள் படுகாயங்களுடன்
இருந்தன. அவர் தகவல்படி, டேனிஷ்பேட்டை வனத்துறையினர் விசாரித்து, நாய்கள் கடித்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இட ஒதுக்கீடு வழங்காமல் மணிமண்டபத்தால் என்ன பயன்?