ADDED : ஆக 19, 2024 06:09 AM
ஆத்துார்: ஆத்துார், தெற்குகாட்டை சேர்ந்தவர் மாதம்மாள், 45. ஆடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் வீடு முன் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது மொபட்டில், 4 பேர் திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.
விசாரணையில் ஆத்துார், மந்தைவெளி சதீஷ்-குமார், 26, வீரமுத்து, 21, அம்மாசி, 20, ஜோதி நகர் கொடியரசு, 22, ஆகியோர் திருடியது தெரிந்தது. 4 பேரையும் நேற்று, ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம், 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்.,' மொபட்டை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சதீஷ்-குமார் மீது கொலை, வழிப்பறி உள்பட, 3 வழக்-குகள் உள்ளன. கடந்த ஜூலையில், ஆத்துார் எஸ்.எஸ்.ஐ., பரமசிவத்திடம் தகராறு செய்தது, உருட்டு கட்டை வைத்து மிரட்டியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். 5 நாட்களுக்கு முன் ஜாமினில் வந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து ஆடு திருடியபோது சிக்கினார்' என்றார்.

