/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் தங்கி பணியாற்றிய 6 வங்கதேசத்தவரிடம் 'கிடுக்கி'
/
சேலத்தில் தங்கி பணியாற்றிய 6 வங்கதேசத்தவரிடம் 'கிடுக்கி'
சேலத்தில் தங்கி பணியாற்றிய 6 வங்கதேசத்தவரிடம் 'கிடுக்கி'
சேலத்தில் தங்கி பணியாற்றிய 6 வங்கதேசத்தவரிடம் 'கிடுக்கி'
ADDED : பிப் 13, 2025 01:08 AM
சேலத்தில் தங்கி பணியாற்றிய 6 வங்கதேசத்தவரிடம் 'கிடுக்கி'
சேலம்:சேலம், சன்னியாசிகுண்டில், வங்கதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியுள்ளதாக, கிச்சிப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற போலீசார், ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து ஜவுளி ஏற்றுமதி வியாபாரம் செய்யும் சென்னையை சேர்ந்த பழனியிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து அங்கு தங்கி பணிபுரிவோரிடம் விசாரித்ததில், 6 பேர் வங்கதேசத்தினர் என்பதும், அவர்களிடம் கர்நாடகா, மேற்கு வங்கத்தின் போலி ஆதார் கார்டுகள் இருப்பதும், சில ஆண்டாக, இங்கு தங்கி வேலை பார்ப்பதும் தெரியவந்தது. மேலும் பாஸ்போர்ட், விசா இல்லாததால், அந்த, 6 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.