/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்பு
/
சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிப்பு
ADDED : செப் 07, 2024 08:17 AM
சேலம்: விசாகப்பட்டினம் - கொல்லம் சிறப்பு ரயில் நவ., 27 காலை, 8:20க்கு புறப்பட்டு ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் மதியம், 12:55க்கு கொல்லத்தை அடையும். நள்ளிரவு, 1:22க்கு சேலம், அதிகாலை, 2:45க்கு ஈரோடு வந்து செல்லும். மறுமார்க்க ரயில் நவ., 28 இரவு, 7:35க்கு கிளம்பி அடுத்தநாள் இரவு, 11:20க்கு விசாகப்பட்டினத்தை அடையும். அதிகாலை, 5:05க்கு ஈரோடு, 6:12க்கு சேலம் வந்து செல்லும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
இருகூர் வழியே இயக்கம்
கோவை ஸ்டேஷனில் பராமரிப்பு பணியால் சில ரயில்களின் வழித்தடம் மாற்றி இயக்கப்பட உள்ளது. அதன்படி செப்., 9, 11, 13ல் கோவை வரும் திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்-பிரஸ்; ஆலப்புழா - தன்பாத்; டில்லி - திருவனந்தபுரம் - கேரளா; எர்ணாகுளம் - பெங்களூரு ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், செப்., 13ல் கோவை வர வேண்டிய ஷாலிமார் - நாகர்கோவில் குருதேவ் எக்ஸ்பிரஸ், இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்-படும். கோவை செல்லாது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.