/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
/
கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு பேட்ஜ் அணிந்தபடி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2024 07:04 AM
சேலம்: தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சேலம் மணியனுார் தெற்கு தாலுகா அலு-வலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கருப்பு பட்டை அணிந்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் பிர-பாகரன் தலைமை வகித்தார்.
வருவாய்துறையே, டிஜிட்டல் சர்வே பணிகளை வி.ஏ.ஓ.,க்கள் மீது திணிக்காதே, அதற்காக கூடுதல் பணியாளர்களை நியமித்-திடு, அதற்கான உபகரணங்களை வழங்கிடு, கடந்த ஜன.,8ல், நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடுகளை உடனடியாக நிறை-வேற்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வட்ட செயலர் பயாஸ், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்-டனர். இத்துடன் சேர்ந்து, மாவட்டத்தில் உள்ள, 14 தாலுகா அலு-வலகத்திலும் கருப்புபட்டை அணிந்து வி.ஏ.ஓ.,க்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.