/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் 1,403 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
/
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் 1,403 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் 1,403 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் 1,403 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்
ADDED : ஆக 10, 2024 07:34 AM
சேலம்: சேலம், சோனா தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதில் பெங்களூரு, 'டசால்ட் சிஸ்டம்ஸ்' நிறுவன துணைத்த-லைவர் லோகநாத ரெட்டி, அமெரிக்கா, கலிபோர்னியா, வால்நட் க்ரீக், பத்ரிராஜசேகர் ஆகியோர், 20 பேருக்கு முனைவர் பட்டம், சிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பிடித்த, 45 மாணவ, மாண-வியர், முதுநிலை பட்டதாரிகள், 320 பேர் உள்பட, 1,403 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரி-வித்தனர்.தொடர்ந்து வள்ளியப்பா பேசுகையில், ''சவால்கள் நிறைந்த இன்றைய சூழலில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து அதற்கேற்ப ஆற்றலை தினமும் வளர்த்து திறம்பட செய-லாற்ற வேண்டும்,'' என்றார்.
இதில் சோனா கல்வி குழும முதல்வர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்
பங்கேற்றனர்.