/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆசிரியர்களை கைது செய்து இழுத்துச்செல்வது நியாயமல்ல! தமிழக அரசுக்கு பல்வேறு சங்கத்தினர் கண்டனம்
/
ஆசிரியர்களை கைது செய்து இழுத்துச்செல்வது நியாயமல்ல! தமிழக அரசுக்கு பல்வேறு சங்கத்தினர் கண்டனம்
ஆசிரியர்களை கைது செய்து இழுத்துச்செல்வது நியாயமல்ல! தமிழக அரசுக்கு பல்வேறு சங்கத்தினர் கண்டனம்
ஆசிரியர்களை கைது செய்து இழுத்துச்செல்வது நியாயமல்ல! தமிழக அரசுக்கு பல்வேறு சங்கத்தினர் கண்டனம்
ADDED : ஆக 01, 2024 08:03 AM
சேலம்: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, குற்றவா-ளிகள் போன்று கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு ஆசிரியர் சங்-கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
'டிட்டோ ஜாக்' சார்பில், 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்க, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்த ஆசி-ரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை, தமிழக அரசு கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கிறது.
ஜனநாயக முறையில் போராடும் ஆசிரியர்களை கைது செய்வது குறித்து ஆசிரியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விபரம்:
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலர் எம். மாயகிருஷ்ணன்: பங்களிப்பு ஓய்வூ-தியம் ரத்து செய்வது உள்ளிட்ட ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தது. தற்போது, 100 சதவீதம் நிறை-வேற்றியதாக கூறிக்கொண்டாலும், ஆசிரியர்களின் ஒரு கோரிக்-கையும் நிறைவேற்றப்படவில்லை. 1968ல் அண்ணாதுரை கொண்டு வந்த ஊக்க ஊதியம், கருணாநிதி ஆட்சியில் கொண்டு-வரப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டர் என, எதுவும் இப்போது இல்லை. நியாய கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரி-யர்களை கைது செய்து இழுத்துச்சென்றது
நியாயமல்ல.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சிறப்பு தலைவர் வே.மணிவாசகம்: இதே கோரிக்-கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், போராட்ட களத்துக்கு வந்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். 3 ஆண்டுகளா-கியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
கொரோனா சூழலில் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு வழங்கப்பட-வில்லை. 21 மாத அகவிலைப்படியை நிறுத்திவிட்டனர். எதிர்க்-கட்சி தலைவராக இருந்தபோது ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமாக தெரிந்தன. தற்போது அதே கோரிக்கைகள் ஏற்க முடி-யாததாக உள்ளன.
ஆசிரியர்கள் போராடும் ஊதிய மாறுபாடு அரசாணையே, 2009ல் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்டது. இதை சரிசெய்ய முயற்-சிக்காமல் ஆசிரியர்களை கைது செய்வது
கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மா.நித்-யானந்தம்: தி.மு.க., சார்பில், தேர்தலின்போது கொடுத்த வாக்கு-றுதியை நிறைவேற்றத்தான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சுக்கு சென்றாலும் நிதிச்சு-மையை காரணம் காட்டி படிப்படியாக நிறைவேற்றப்படும் என்-கின்றனர். 3 ஆண்டுகளாகியும் எதுவும் நிறைவேற்றப்பட-வில்லை.
மாறாக ஆசிரியர்களுக்கு பணிச்சுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஈட்டிய
விடுப்பு, அகவிலைப்படி என இழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களை தரக்குறைவாக இழுத்துச்சென்று கைது செய்யும் நிலை வருந்தத்தக்கது. எங்கள் சங்கம் சார்பில் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பி.கோவிந்தன்: தற்போது போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், அரசாணை எண்: 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை துாக்கி பிடிக்கின்றனர். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கொண்டுவ-ரப்பட்ட அரசாணை அது. அதனால் பட்டதாரி ஆசிரியர்களின், 20 ஆண்டு போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதை தவிர்த்து மற்ற கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து போராடியிருந்தால், அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு கொடுத்திருக்கும்.
இதனால்தான் ஜாக்டோ ஜியோ அமைப்பில் இருந்து பிரிந்து தனியே சென்று போராடி வருகின்றனர். இந்த அரசாணையை ரத்து செய்யக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆசிரியர்-களின் கைது, மண்டபத்தில் அடைத்து வைப்பதை
தவிர்த்திருக்கலாம்.