/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு 120 அடியில் இருந்து மேட்டூர் நீர்மட்டம் சரிவு
/
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு 120 அடியில் இருந்து மேட்டூர் நீர்மட்டம் சரிவு
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு 120 அடியில் இருந்து மேட்டூர் நீர்மட்டம் சரிவு
கர்நாடகா அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு 120 அடியில் இருந்து மேட்டூர் நீர்மட்டம் சரிவு
ADDED : ஆக 10, 2024 07:34 AM
மேட்டூர்: கர்நாடகா அணைகளின் உபரிநீர் திறப்பு வினாடிக்கு, 18,000 கன-அடியாக அதிகரிக்கப்பட்டது. அதேநேரம் முழு கொள்ளளவான, 120 அடியில் இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், 10 நாட்க-ளுக்கு பின், 119.59 அடியாக சரிந்தது.
கர்நாடகா அணைகள் நிரம்பிய நிலையில் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த, 30ல் மேட்டூர் அணை நிரம்பியது. அணையில் இருந்து அதிகபட்சம் வினாடிக்கு, 1.71 லட்சம் கனஅடி நீர், பாசனம், கால்வாய், உபரிநீராக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டது.
கபினி நீர்வரத்து
இந்நிலையில் கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் உபரிநீர் திறப்பு வினாடிக்கு, 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் வினாடிக்கு, 10,115 கன அடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, நேற்று, 17,403 கனஅடியாக அதிகரித்-தது. ஆனால் வினாடிக்கு, 6,471 கனஅடியாக இருந்த கபினி நீர்-வரத்து நேற்று, 6,020 கனஅடியாக சற்று சரிந்தது.
டெல்டா நீர் திறப்பு அதிகரிப்பு
நேற்று முன்தினம் வினாடிக்கு, 12,000 கனஅடியாக இருந்த கபினி, கே.ஆர்.எஸ்., உபரிநீர் திறப்பு, நேற்று, 18,000 கன அடி-யாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த, 30ல் முழு கொள்ளளவான, 120 அடியை எட்டியது. நீர்வரத்து சரிந்ததால் கடந்த, 7ல், அணை, 16 கண் மதகு ஷட்டர்கள் மூடப்பட்டு உபரிநீர் நிறுத்தப்-பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, 12,000 கனஅடியாக அதிகரிக்கப்
பட்டது.
௧௦ நாட்களாக...
இந்நிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,000 கனஅடி-யாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 5,258 கனஅடி-யாக சரிந்தது.
இதற்கேற்ப, 10 நாட்களாக
நிரம்பியிருந்த அணை நீர்மட்டம், நேற்று காலை, 8:00 மணிக்கு, 119.59 அடியாக சரிந்தது. 93.47 டி.எம்.சி.,யாக இருந்த நீர்இ-ருப்பும், 92.81 டி.எம்.சி.,யாக
சரிந்தது.