/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து போராட்டம்
/
கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து போராட்டம்
ADDED : ஜூலை 03, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : மனித நேய மக்கள் கட்சி சார்பில், சேலம், கோட்டை மைதா-னத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை பிரதிநிதி சாதிக் பாட்ஷா தலைமை வகித்தார். அதில் கள்ளக்குறிச்சி கள்ளச்-சாராய மரணத்துக்கு காரணமாண அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், கட்சி நிர்வா-கிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் மது உள்ளிட்ட அனைத்து வகை போதை பொருட்-களை தடை செய்யக்கோரி, ஓமலுாரில் மேற்கு மாவட்ட தலைவர் அப்துல் அக்கீம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, மது வணிகம் என்ற மரண வியாபாரத்தை நிறுத்த வேண்டும்; பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர்.