/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்குகள் மோதிய விபத்தில் குழந்தை உள்பட மூவர் காயம்
/
பைக்குகள் மோதிய விபத்தில் குழந்தை உள்பட மூவர் காயம்
பைக்குகள் மோதிய விபத்தில் குழந்தை உள்பட மூவர் காயம்
பைக்குகள் மோதிய விபத்தில் குழந்தை உள்பட மூவர் காயம்
ADDED : ஆக 20, 2024 03:23 AM
மேட்டூர்: முன்னால் சென்ற பைக் மீது, பின்னால் வந்த பைக் மோதி ஆட்டோ ஓட்டுனர் மனைவி, இரு குழந்தைகள் காயமடைந்தனர்.
மேட்டூர், கூலிலைன் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் குமரவடிவேல். மனைவி வனிதா, 29. தம்பதியருக்கு மதுஈஸ்வரி, 9, கமலேஷன், 5, என இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு ேஹாண்டா பைக்கில் மேட்டூர் 4 ரோட்டில் இருந்து துாக்கனாம்பட்டி நோக்கி சென்றனர். அப்போது பின்னால் யமஹா பைக்கில் வந்த, இரண்டு 16 வயது சிறுவர்கள் முன்னால் சென்ற ேஹாண்டா பைக்கில் மோதினர்.விபத்தில் வனிதா, அவரது இரு குழந்தைகளுக்கும் முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது. வனிதா கொடுத்த புகார்படி மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.