sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

/

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


ADDED : ஜூலை 12, 2011 01:31 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், நேற்று இரவு மர்ம நபர்கள் இருவர், பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

சேலம், அரிசிப்பாளையம், கோவிந்தன் தெருவை சேர்ந்தவர் மனோகர்(53), அவரது மனைவி சுமதி(47). சாமிநாதபுரத்தில் டிஃபன் கடை வைத்துள்ளனர். நேற்று இரவு 11 மணிக்கு டிஃபன் கடையை மூடிவிட்டு, இருவரும் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். அரிசிப்பாளையம் அருகே வந்த போது, மர்ம நபர்கள் இரண்டு பேர் வேகமாக பைக்கில் வந்து, சுமதியின் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதில், இரண்டரை பவுன் தங்க சங்கிலி மட்டும் மர்ம ஆசாமிகள் கையில் சிக்கியது. பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






      Dinamalar
      Follow us