sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபைல் விற்பனையாளர் கடையடைப்பு போராட்டம்

/

மொபைல் விற்பனையாளர் கடையடைப்பு போராட்டம்

மொபைல் விற்பனையாளர் கடையடைப்பு போராட்டம்

மொபைல் விற்பனையாளர் கடையடைப்பு போராட்டம்


ADDED : ஜூலை 14, 2011 01:36 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்தூர்: மொபைல்ஃபோன் ஈ-ரீசார்ஜ் மற்றும் கூப்பன் விற்பனைக்கான கமிஷன் குறைக்கப்பட்டதை கண்டித்து, ஆத்தூர் பகுதியில் உள்ள, 130க்கும் மேற்பட்ட மொபைல்ஃபோன் விற்பனையாளர்கள், நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரும் 17ம் தேதி வரை, ரீசார்ஜ் கூப்பன் மற்றும் புதிய சிம்கார்டுகள் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஆத்தூர் டவுன், நரசிங்கபுரம், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட மொபைல்ஃபோன் கடைகள் உள்ளன. ஈ-ரீசார்ஜ், கூப்பன் மற்றும் புதிய சிம்கார்டுகள் விற்பனையில், ஆத்தூர் நகரில் மட்டும், 130க்கும் மேற்பட்டோர் ஈடுப்பட்டு வருகின்றனர். இரு வாரங்களுக்கு முன், ஈ-ரீசார்ஜ் மற்றும் கூப்பன் விற்பனைக்கான கமிஷன் தொகை குறைக்கப்பட்டதால், மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். அனைத்து மொபைல் ஃபோன் நிறுவனங்கள், கமிஷன் தொகை குறைத்துள்ளதை கண்டித்து நேற்று, ஆத்தூர் நகரில் மொபைல்ஃபோன் விற்பனையாளர்கள், ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் வளாகத்தில், ஆத்தூர் மொபைல் அசோசியேஷன் சார்பில், சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கமிஷன் தொகை குறைக்கப்பட்டதை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்துவதோடு, வரும் 17ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு எவ்வித புதிய சிம் கார்டு இணைப்புகள் மற்றும் ஈ-ரீசார்ஜ் செய்வதில்லை என, தீர்மானம் நிறைவேற்றினர். ஆத்தூர், நரசிங்கபுரம், தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மொபைல்ஃபோன் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், மொபைல்ஃபோன் விற்பனையாளர்கள், ஈ-ரீசார்ஜ், கூப்பன் விற்பனையை நிறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.








      Dinamalar
      Follow us