/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கடலை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
/
நிலக்கடலை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு
ADDED : ஜன 20, 2024 07:54 AM
கொளத்துார் : கொளத்துார் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. ஆண்டுதோறும் பருவமழை கை கொடுத்தால், விவசாயிகள் நெல், வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களை கூடுதலாக சாகுபடி செய்வர். நடப்பாண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நெல் சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. அதற்கு பதில் நிலக்கடலை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு, 1,500 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் நடப்பாண்டு, 105 முதல், 120 நாட்களில் பலன் தரும் கதிரி, தரணி, டி.எம்.வி., 7 ரக நிலக்கடலையை, 2,000 ஏக்கர் வரை சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி பரப்பு அதிகரித்ததோடு, விரைவில் அறுவடை தொடங்க உள்ளது, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.