/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 07:37 AM
சேலம் : சேலம், கோட்டை மைதானத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், 2ம் நாளாக நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அதில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''தி.மு.க., அரசு, 311வது தேர்தல் வாக்குறுதியை, 3 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடுகளை போக்கி அனைவருக்கும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு கேட்கவில்லை. சம கல்வி தகுதியில் ஒரே பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பதை ஏற்க முடியாது,'' என்றார்.இதில் மாவட்ட துணைத்தலைவர் கணேசன், செயலர் அருள் உள்பட பலர் பங்கேற்றனர்.

