/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேர்தலை புறக்கணிப்போம்! மலைக்கிராமத்தினர் அறிவிப்பு
/
தேர்தலை புறக்கணிப்போம்! மலைக்கிராமத்தினர் அறிவிப்பு
தேர்தலை புறக்கணிப்போம்! மலைக்கிராமத்தினர் அறிவிப்பு
தேர்தலை புறக்கணிப்போம்! மலைக்கிராமத்தினர் அறிவிப்பு
ADDED : மார் 06, 2024 06:45 AM
ஏற்காடு : ஏற்காட்டில் இருந்து, 20 கி.மீ., தொலைவில், செங்கலத்துப்பாடி மலைக்கிராமம் உள்ளது. அங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு தனியே மயானம் வசதி செய்து கொடுக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மக்கள், ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர், தாசில்தார், ஒன்றிய கமிஷனரிடம் அளித்த மனு:
குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த நாங்கள், மலை கிராமத்தில் பூர்வீகமாக வசிக்கிறோம். பொது மயானம் ஒதுக்கி தரக்கோரி அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பலமுறை மனு கொடுத்ததும் நேரடியாக கேட்டும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த சட்டசபை தேர்தலில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்டோர் பேச்சு நடத்தி, மயானத்துக்கு, 1 ஏக்கர், 5 சென்ட் நிலத்தை பெற்றுத்தருவதாக உறுதியளித்தனர். ஆனால் அரசு தரப்பில் நிலம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்காததால், வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்போம்.

