/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனைவரும் ஓட்டுப்போடுங்க! கல்லூரியில் விழிப்புணர்வு
/
அனைவரும் ஓட்டுப்போடுங்க! கல்லூரியில் விழிப்புணர்வு
அனைவரும் ஓட்டுப்போடுங்க! கல்லூரியில் விழிப்புணர்வு
அனைவரும் ஓட்டுப்போடுங்க! கல்லூரியில் விழிப்புணர்வு
ADDED : மார் 20, 2024 07:24 AM
சேலம் : சேலம் அரசு கலைக்கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி தலைமை வகித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
சேலம் லோக்சபாவில், 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் ஓட்டுப்போட்டு 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்திட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. அதற்காக, சட்டசபை தொகுதி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தயார் செய்யப்பட்ட அட்டவணைப்படி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு கலைக்கல்லுாரியில், ஒவியப்போட்டி, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம், மனித சங்கிலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்படுகிறது. வயது 18 நிரம்பிய அனைவரும் கட்டாயம் ஓட்டுப்போட்டு, ஜனநாயக கடமையை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேரணி
கெங்கவல்லி சட்டசபை தொகுதி சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தொடங்கி வைத்தார். அதில், ஏப்., 19ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்போட வலியுறுத்தியும், ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்றனர். முன்னதாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.

