ADDED : டிச 22, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, டிச. 22-
இடங்கணசாலை நகராட்சி, சித்தர்கோவில் அருகே மன்னாதகவுண்டனுாரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அப்பகுதியில் கழிப்பறை இல்லாததால், மக்கள் திறந்த வெளியில் செல்லும் அவலம் தொடர்கிறது.
குறிப்பாக பெண்கள், புதர் பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு விஷ ஜந்துக்களால் அச்சப்படுகின்றனர். இதனால் பொது கழிப்பறை கட்டித்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.