தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தெப்ப தேரோட்டம் கோலாகலம்

தெப்ப தேரோட்டம் கோலாகலம்

தெப்ப தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஜன 11, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம், தாரமங்கலம் அருகே மானத்தாள் வேட்ராய பெருமாள் கோவில், சோரகை என அழைக்கப்படும் சிறு மலை உச்சியில் உள்ளது. நேற்று முன்தினம் கண்காணிப்பட்டி கோவில் வீட்டில் இருந்து சுவாமி, மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. துவாதசியையொட்டி நேற்று அக்கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது.

மலை உச்சியிலிருந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேட்ராய பெருமாள், மேள, தாளம் முழங்க கீழே கொண்டு வரப்பட்டார். மானத்தாள் ஏரிக்

கரையில் உள்ள சஞ்சீவராயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தில் வேட்ராய பெருமாள், சிறு தெப்பத்தில் சஞ்சீவராயர் சுவாமியை எழுந்தருள செய்தனர். தொடர்ந்து பூஜை செய்து மானத்தாள் ஏரியில் நேற்று மாலை தெப்ப தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், ஏரிக்கரையில் நின்று தரிசனம் செய்தனர். தொளசம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us