/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அணை பொறியாளர்களுக்குதொழில்நுட்ப பயிற்சி
/
அணை பொறியாளர்களுக்குதொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஜன 22, 2025 01:17 AM
அணை பொறியாளர்களுக்குதொழில்நுட்ப பயிற்சி
மேட்டூர்:மேட்டூர் அணையில், நிலநடுக்கம் பதிவு செய்யும் சீஸ்மோகிராப், சீதோஷ்ண நிலை மாற்றத்தை கண்டறியும் கருவி உள்பட, பல்வேறு தொழில்நுட்ப கருவிகள், அணை புனரமைப்பு இயக்கம் சார்பில், 2020ல் அமைக்கப்பட்டன. அந்த கருவிகளை கையாள்வது குறித்து அணை பொறியாளர்கள், ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க, புனரமைப்பு குழுவை சேர்ந்த, 5 பயிற்சியாளர்கள், மேட்டூர் நீர்வளத்துறை அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். தொடர்ந்து அங்கு அணை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்பட, அணையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, தொழில்நுட்ப கருவிகளை இயக்குவது குறித்து பயிற்சி நடந்தது. இரண்டாம் நாளான இன்று, அணை புனரமைப்பு இயக்க பொறியாளர்கள், மேட்டூர் அணையை ஆய்வு செய்து, அங்கு பொருத்தியுள்ள கருவிகளை கையாள்வது குறித்து நேரடி பயிற்சி அளிக்கின்றனர்.