ADDED : பிப் 05, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போக்சோ' சட்டத்தில்தொழிலாளி கைது
பனமரத்துப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், 55. இவர் சேலத்தில் தங்கி, ஹாலோ பிளாக் கல் உற்பத்தி நிறுவனத்தில், கூலி வேலை செய்து வந்தார். திருமணம் ஆகவில்லை. இவர், நேற்று மதியம் கொண்டலாம்பட்டி அருகே வீட்டில் தனியே இருந்த, 9 வயது சிறுமிக்கு, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி கூச்சலிட, அக்கம், பக்கத்தினர் வந்து, வெங்கடேசனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, கொண்டலாம்பட்டியில் உள்ள மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.