ADDED : பிப் 07, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, பெரம்பலுார் மாவட்டங்களுக்கு தலைமையிடமாக, ஆதிதிராவிடர் பழங்குடியினர் கண்காணிப்பு பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. அதன் டி.எஸ்.பி.,யாக நாகராஜன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் சேலத்தில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நிலையில், உதவி கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். பின், திருப்பூர் சென்றார். தற்போது சேலத்தில் டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட
போலீசார், வாழ்த்து தெரிவித்தனர்.

