ADDED : பிப் 19, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயிகளுக்கு பயிற்சி
அ.பட்டணம்:அயோத்தியாப்பட்டணம், பெரியகவுண்டாபுரம், நொச்சிப்பட்டியில், 'அட்மா' திட்டத்தில், அங்கக வர்த்தக சான்று பெறும் வழிமுறை குறித்து, விவசாயிகள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி, பயிற்சியின் நோக்கம், பயன்கள் குறித்து பேசினார்.
அங்கக விதை சான்று உதவி இயக்குனர் நவநீதகிருஷ்ணன், விவசாயிகள் தனிநபராகவோ, குழுவாகவோ அங்கக விளைபொருட்கள் விற்பனை, ஏற்றுமதி செய்வோர் அங்கக வர்த்தக சான்று பெற தேவைப்படும் ஆவணங்கள், கட்டணம், வழிமுறைகள் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தார். பல்துறை அதிகாரிகள், துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும் தெரிவித்தனர்.