ADDED : பிப் 19, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியம்பழம் பறிக்க ஏலம்
வீரபாண்டி:வீரபாண்டி ஒன்றியத்தில், அரியானுார் - ஆட்டையாம்பட்டி பிரதான சாலையின் இருபுறமும், 100க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. அவற்றில் வீரபாண்டி ஊராட்சிக்கு சொந்தமான, 88 மரங்களில் வளர்ந்துள்ள புளியம் பழங்களை பறித்துக்கொள்ளும் உரிம ஏலம் கடந்த, 13ல் நடந்தது.
இதில், 51,072 ரூபாய்க்கு கோரிய கிருஷ்ணசாமிக்கு உரிமம் வழங்கப்பட்டது. அதேபோல் அக்கரபாளையம் ஊராட்சிக்கு சொந்தமாக, 34 மரங்கள் உள்ளன. அவற்றில் 27 மரங்களில் மட்டும் பழங்கள் உள்ளதால் அதன் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. அதில், 25,901 ரூபாய்க்கு சாமியப்பன் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. இனாம் பைரோஜி ஊராட்சிக்கு சொந்தமாக உள்ள மரங்களுக்கு, நாளை ஏலம் நடக்க உள்ளது.