ADDED : பிப் 20, 2025 01:45 AM
மாசி திருவிழா தொடக்கம்
சங்ககிரி:சங்ககிரி மலை, கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன், மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அம்மனுக்கு, திருநீறு, சிவப்பு, சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடக்கும். வரும், 4ல் பொங்கல் வைபவம் நடக்க உள்ளது.
சக்திமாரியம்மன்அதேபோல் வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. வரும், 5ல் பொங்கல் விழா, 6ல் நடப்பட்ட கம்பம் ஊர் நல்ல கிணற்றில் விடுதல், 7ல் மஞ்சள் நீராடுதல், சக்திமாரியம்மன் உற்சவ அம்மன், முக்கிய வீதிகள் வழியே உலா வருதல் நடக்க உள்ளது.
அதேபோல் சங்ககிரி நகர், வாணியர் காலனியில் உள்ள அல்லிமாரியம்மன் கோவில் பொங்கல் விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. வரும், 5ல் பொங்கல் விழா நடக்க உள்ளது.
இன்று தீ மிதி விழாமாசி திருவிழாவை ஒட்டி, ஓமலுார் அருகே செலவடை, தோரமங்கலத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோவிலில் சக்தி கரகம், மகிஷா சூரசம்ஹாரம், பொங்கல் ஆராதனை, அம்பாள் திருத்தேர் திருவீதி உலா நேற்று முன்தினம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு தீ மிதி விழா நடக்கிறது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.