/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மும்பை பங்குச்சந்தையில்சண்முகா மருத்துவமனை
/
மும்பை பங்குச்சந்தையில்சண்முகா மருத்துவமனை
ADDED : பிப் 22, 2025 01:33 AM
மும்பை பங்குச்சந்தையில்சண்முகா மருத்துவமனை
சேலம்:சேலம், சண்முகா மருத்துவமனையில், அதன் பங்குகள் விற்பனை தொடக்க விழா, நேற்று நடந்தது. அதன் நிர்வாக இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார். மேலாண் இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சண்முகா நர்சிங் கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி, மருத்துவமனை, சி.இ.ஓ., பிரபுஷங்கர் முன்னிலை வகித்தனர். காலை, 10:00 மணிக்கு, மும்பை பங்குச்சந்தையில் சண்முகா மருத்துவமனை பெயர் பட்டியலிடப்பட்டதை, 'பெல்' அடித்து வரவேற்றனர். தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை தெற்கு மண்டல தலைவர் செந்தில்வேலவன் பேசினார். இதில் மருத்துவர்கள், முதலீட்டாளர்கள், கம்பெனி செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

