ADDED : மார் 03, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணையில் மூழ்கிய பெயின்டர்
மேட்டூர்:ஓமலுார், கருப்பணம்பட்டியை சேர்ந்த, பெயின்டர் இளையராஜா, 35. திருமணம் ஆகவில்லை. இவர் உள்பட, 5 பேர், நேற்று மதியம், மேட்டூர் அணை கூனாண்டியூர் நீர்பரப்பு பகுதியில் மது அருந்திவிட்டு கறி சமைத்து சாப்பிட்டனர்.
தொடர்ந்து இளையராஜா, நீர்பரப்பு பகுதியில் உள்ள சிறு குன்றுக்கு நீச்சல் அடித்து சென்று விட்டு திரும்புவதாக கூறி புறப்பட்டார். நீச்சல் தெரிந்த அவர், மூழ்கியதாக, நண்பர்கள் தெரிவித்தனர். அவர்கள் தகவல்படி, மேச்சேரி போலீசார், மேட்டூர் தீயணைப்பு வீரர்கள், மதியம், 3:00 மணிக்கு, பரிசலில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இளையராஜாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால், இன்று காலை தேட முடிவு செய்தனர்.