ADDED : மார் 03, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ் புலிகள் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், அக்கட்சி நிறுவன தலைவர் திருவள்ளுவன் அளித்த பேட்டி:
புது கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என மத்திய அரசு கூறுவதை கண்டிக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு பெயரில் தமிழக தொகுதிகள் குறைக்கப்படுவதாக தகவல் பரவுகிறது. திட்டமிட்டு எல்லா நிலையிலும் தமிழகத்தை வஞ்சிக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நாளை மறுநாள் நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில், தமிழ் புலிகள் கட்சி பங்கேற்கும். 2026 தேர்தலிலும், தி.மு.க., வெற்றிக்கு பணிபுரிவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.