ADDED : மார் 06, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவிபுரம் கரட்டில் தீ
மேட்டூர், கவிபுரம், போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள கரட்டில் புல், பூண்டுகள் நேற்று மதியம், 12:30 மணிக்கு எரிந்தது. சுற்றுப்பகுதியில் பரவி ஒரு ஏக்கர் நிலத்தில் புல், செடிகள் கருகின. மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அதற்குள் கரடு அடிவாரம் வசிக்கும் மக்கள், தண்ணீர் தெளித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு குழுவினரும், மேலும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.