ADDED : மார் 13, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் வாலிபர் பலி
தாரமங்கலம்:சேலம் அருகே, எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் வித்யா, 25. சின்னசோரகையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரை அழைத்துச்செல்ல கணவர் விக்னேஷ், 29, கடந்த 9 இரவு, 8:00 மணிக்கு, 'டியோ மொபட்டில் கருக்கல்வாடி பிரிவு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் வந்தவர் மோதியதில் தடுமாறி விழுந்த விக்னேஷ் படுகாயம் அடைந்தார். மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வித்யா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் விக்னேஷ், மருத்துவமனையில் உயிரிழந்தார்.