ADDED : மார் 13, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பார்த்த பெண்ணையேமணமுடித்த வாலிபர்
தாரமங்கலம்:தாரமங்கலம், பெரியாம்பட்டி காட்டுவளவை சேர்ந்தவர் அன்பழகன், 27. வீடுகளுக்கு கண்ணாடி வேலை செய்கிறார். இவர், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த ராதிகா, 22, என்பவரை, 4 மாதங்களுக்கு முன், திருமணத்துக்கு பெண் பார்க்க சென்றார். தொடர்ந்து இரு வீட்டு பெற்றோர் பேசிய நிலையில், ராதிகா பெற்றோர், பெண் கொடுக்க மறுத்தனர். ராதிகாவை அன்பழகனுக்கு பிடித்ததால், 4 மாதங்களாக போனில் பேசி பழகினர். தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததால், நேற்று வீட்டை விட்டு வெளியேறி, அணைமேட்டில் உள்ள ராஜமுருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருவரது பெற்றோரை அழைத்து பேசி, அவர்களுடன் அனுப்பிவைத்தனர்.