நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹோலி 'ஜாலி'
சேலம்:சேலத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர்.
குறிப்பாக கிச்சிப்பாளையம், நாராயண நகரில் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள் நேற்று ஒன்று திரண்டு, ஹோலி பண்டிகையை கொண்டாடினர். வண்ண கலர் பொடி கலந்த நீரை, ஒருவர் மீது ஒருவர் தெளித்து கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் நாராயண நகரில் ஊர்வலமாக வந்து, பாரம்பரிய நடனங்களை ஆடி பாடி இனிப்பு வழங்கினர். அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். அதேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாழும் வட மாநிலத்தினர், ஹோலி பண்டிகையை, 'ஜாலி'யாக கொண்டாடினர்.