ADDED : மார் 16, 2025 01:55 AM
தள்ளுபடி விலையில் 'குஜராத் மேளா'
சேலம்:சேலம், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, தெய்வீகம் திருமண மண்டபத்தில் குஜராத் மேளா கோடைகால சிறப்பு விற்பனை, கடந்த, 13ல் தொடங்கி நடந்து வருகிறது. ஏப்., 7 வரை நடக்கிறது.
இதில் கைத்தறி குர்த்தீஸ், ஆந்திரா, செட்டிநாடு கைத்தறி காட்டன், வாழைநார், பெங்கால் சேலை ரகங்கள் விற்கப்படுகின்றன. பெண்களுக்கு குஜராத், பனாரஸ், பேன்ஸி குர்த்தீஸ், லெகின்ஸ், காட்டன் பேன்ட்ஸ், பட்டியாலா சுடி, பேன்ட்ஸ், ஸ்கர்ட் மாடல்கள், ஷால்கள், ஸ்கர்ட், பர்முடாஸ், நைட் பேன்ட்ஸ் மட்டு
மின்றி ஜெய்பூர் மெத்தை விரிப்புகள், பெட்சீட், ஷோபா கவர், குஷன் தலையணை உரை, ஹைதராபாத் முத்து பவள மாலைகள், ராசி கற்கள், வளையல், குழந்தைகளுக்கு டி சர்ட் கிடைக்கும். ராஜஸ்தான் டாய்ஸ் மர பொம்மை கள், விளையாட்டு பொருட்கள், ஆண்கள் துணி வகைகள், ஹைதராபாத் காட்டன் சேலைகள், குர்த்தீஸ் உள்ளன. சிறப்பு தள்ளுபடி, 10 முதல், 20 சதவீதம் வழங்கப்படுகிறது. மக்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்
கொள்ளலாம்.