ADDED : மார் 18, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
ஆத்துார்:ஆத்துார், கோட்டை, அண்ணா நகரை சேர்ந்த ராஜா மகன் விக்னேஷ், 22. தள்ளுவண்டியில் சில்லி சிக்கன் விற்பனை செய்து வருகிறார். கல்லாநத்தம் ஊராட்சி முட்டலை சேர்ந்த, ரவி மகள் துர்கா, 19. பிளஸ் 2 முடித்த இவர், கோட்டை பகுதிக்கு தோழியை பார்க்க வந்தபோது, விக்னேஷூடன் பழக்கம் ஏற்பட்டு, இரு ஆண்டாக காதலித்தனர். இதற்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், ஆத்துார் வெள்ளப்பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு, ஆத்துார் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

